அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலாமானதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
இவர் நேற்றையதினம் (09.05.2024) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.
இறுதிச் சடங்கு
அபுதாபியில் உள்ள ஷேக் சுல்தான் பின் சயீத் முதல் மசூதியில் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானுக்கான இறுதிச் சடங்குகளை ஷேக்குகளும் வழிபாட்டாளர்களும் செய்து, அல் பாடீன் கல்லறையில் உள்ள அவரது இறுதி இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில் இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்ததாவது,
“இறைவன், இவருக்கு பரந்த கருணையை கொடுக்க வேண்டும், அவருக்கு சொர்க்கத்தை வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அல்லா அருள் புரிய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.