ரொறன்ரோவின் தொண்டு நிறுவனமொன்றில் 700000 டொலர் மோசடி செய்ததாக நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலியான பற்றுச் சீட்டுக்கள் மற்றும் விலைப்பட்டியல்களை பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்து போலி வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நபர் குறித்த தொண்டு நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்தி ரசீதுகளுக்கான கொடுப்பனவுகளை செய்துள்ளார்.
ரிச்மன்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த 36 வயதான அப்பாஸ் அலி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.