கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ளக் கூடிய ஐந்து வழிமுறைகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
கனடிய குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து உயர்கல்வியை பூர்த்தி செய்யும் மாணவர்கள், நாட்டில் நிரந்தரமாக வதிவதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன.
அவற்றில் சில வழிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் உயர் கல்வியை பூர்த்தி செய்ததன் பின்னர் தொடர்ந்து நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்வதற்கு ஐந்து வழிமுறைகள் காணப்படுகின்றன.
1. The Express Entry Program
2. The PNP, or Provincial Nominee Program
3. Atlantic Immigration Program (AIP)
4. Rural and Northern Immigration Pilot (RNIP)
5. Agriculture and agri-food pilot
பட்டபின் கற்கையின் போது தொழில் செய்வதற்கான அனுமதி நிரந்தர வதிவுரிமை பெற்றுக் கொள்வதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
விரைவு நுழைவு முறையின் (Express Entry Program) ஊடாக வெளிநாட்டு பட்டதாரிகள் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
விரைவு நுழைவு முறையின் (Express Entry Program) ஊடாக வெளிநாட்டு பட்டதாரிகள் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
வயது, கல்வி,மொழியறிவு, தொழில் வரலாறு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பதாரிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.
கனடிய தொழில் அனுபவத்தின் அடிப்படையிலும் விண்ணப்பம் செய்ய முடியும்.
குறிப்பாக பிரெஞ்சு மொழியறிவு மற்றும் குடிவரவு குடியகல்வு அமைச்சின் பரிந்துரைக்கு அமையவான தொழில்களில் 6 மாதங்கள் வரையில் ஈடுபடுதல் மேலதிக தகமையாக கருதப்படும்.
பி.என்.பி முறையின் (PNP, or Provincial Nominee Program) ஊடாகவும் நிரந்தர வதிவுரிமைக்காக வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும். கனடாவின் பெரிய மாகாணங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவுரிமை வழங்குகின்றன.
மாகாணங்கள் சில தகமைகளின் அடிப்படையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இவ்வாறு நிரந்தர வதிவுரிமை வழங்கப்பட உள்ளது.
2025 ஆண்டளவில் பி.என்.பி முறையின் கீழ் 110000 பேருக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கப்பட உள்ளது.
அட்லாண்டிக் குடிவரவுத் திட்டத்தின் (Atlantic Immigration Program) ஊடாகவும் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.
அட்லாண்டிக் மாகாணங்களில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.
மேலும் அண்மையில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்து கொண்ட வெளிநாட்டு மாணவர்களுக்கும் இதில் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
மாகாணங்களில் நிலவும் ஆளணி வளப் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கிராமிய மற்றும் வடக்கு குடிவரவு பரீட்சார்த்த திட்டத்தின் (Rural and Northern Immigration Pilot) ஊடாகவும் இந்த நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள முடியும்.
உயர்கல்வியை பூர்த்தி செய்த வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பிட்ட சில கிராமங்களில் நிரந்தர வதிவுரிமை கோரி விண்ண்ணம் செய்ய முடியும்.
விவசாய மற்றும் உணவு பரீட்சார்த்த குடிவரவுத் திட்டத்தின் (Agriculture and agri-food pilot) ஊடாகவும் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள முடியும்.
விலங்கு வேளாண்மை, பசுமை விவசாயம், இறைச்சி பதப்படுத்தல் போன்ற தொழில்துறைகளிலும் சர்வதேச மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிரந்தர வதிவுரிமை வழங்கப்படும் மாணவர்கள் நீண்ட காலத்திற்கு குறிப்பிட்ட இடங்களில் வதிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.