தலைமன்னாரிலிருந்து - தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணித்தியாலம் 10 நிமிடங்களில் 12 இந்திய நீச்சல் வீர, வீராங்கணைகள் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12 நீச்சல் வீர வீராங்கணைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து, இந்த சாதனை படைத்துள்ளனர்
இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தனர்.
இந்திய - இலங்கை இரண்டு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், நேற்றுமுன்தினம் பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து 2 படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னாரை வந்தடைந்தனர்.
தலைமன்னாரில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில் நீந்த தொடங்கிய 12 பேரும் மாலை 4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்தனர்.
இவ்வாறு நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் பொலிஸார், சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்.