கஞ்சாவை(ganja) சட்டபூர்வமாக்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் அரசாங்கத்திடம் முறையான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கஞ்சா சோதனைகள் தேவையற்றது
கஞ்சா சோதனைகள் தேவையற்றது என்று கூறிய அவர், இலங்கையில்(sri lanka) மதுபானங்கள் இல்லாத காலகட்டத்தில் சாமானியர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறினார்.
இனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது
கஞ்சா பயன்பாடு சிறப்பான உத்வேகத்தையும் வலிமையையும் தருவதுடன் இனத்தின் வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை யுக்திய என்ற பெயரில் காவல்துறையினர், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் அதனை விநியோகம் செய்பவர்களை தேடி கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.