கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாண முதல்வர் ரிம் ஹுட்சன் இரகசியமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹுட்சன் அண்மையில் ஸ்பெய்னுக்கு விஜயம் செய்திருந்தார்.
வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்தப் பயணம் தொடர்பில் முதல்வர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
சுற்றுலாத்துறை, ஆய்வுத்துறை மற்றும் இரு தரப்பு வர்த்தக விடயங்களை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக முதல்வர் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பயணங்கள் பகிரங்கமானவை எனவும் இதில் மூடி மறைப்பதற்கு எதுவுமில்லை என முதல்வர் ஹுட்சன் தெரிவித்திருந்தார்.
முதல்வர் உலகை சுற்றி வருவதாகவும் இதனால் நோவா ஸ்கோஷியா மாகாண மக்களுக்கு எதுவித நலனும் கிடைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
பொதுமக்களின் பணம் விரயம் செய்யப்படக் சுடாது என குறிப்பிட்டுள்ளன.