போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பலேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பலேகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகையாவ பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி யுவனேஸ் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில்
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 54ஆவது பிரிவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.