துபாயில் கட்டப்பட்டு வந்த புதிய ஸ்டேடியம் பேருந்து நிலையம் ஆனது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று மே 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை எமிரேட்டில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையம் ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்திற்கு பின்புறம் கல் குசைஸ் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையம் பயண நேரத்தை குறைப்பதையும் பிற வெகுஜன போக்குவரத்து விருப்பங்களுக்கு தடையற்ற இணைப்புகளை வழங்குவதையும் இலக்காக கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இது பயணிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் RDA தெரிவித்துள்ளது.