அரச நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் சுகயீன விடுமுறை பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.
நிதி அமைச்சிற்கு முன்பாக அரச நிறைவேற்று அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச பொறியியல் சேவை, விவசாயம், கல்வி, சுகாதாரம், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், திட்டமிடல், நில அளவை, கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 18 துறைகளில் அரச நிறைவேற்று சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கொழும்பு கோட்டையில் பேரணியை முன்னெடுத்து, நிதியமைச்சிற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு செரமிக் சந்தி , NSA சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டது.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.