கனடாவில் சர்வதேச மாணவர்கள் இனி 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி
கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால்இ அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர்.
கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள்இ தங்கள் பணத்தேவைகளுக்காகஇ வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
கோவிட் காலகட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால்இ அதை சமாளிக்கஇ மாணவர்கள் கூடுதலாக சில மணி நேரம் பணி செய்ய அனுமதிக்கப்பட்டது. அதாவதுஇ கல்வி கற்கும் மாணவர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.
ஆனால்இ அந்த விதிஇ இன்றுடன்இ அதாவதுஇ ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இனிஇ கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள்இ வாரத்துக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி உண்டு.
கனடாவுக்கு சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் நோக்கமேஇ அவர்களுக்கு கல்வி அளிப்பதற்காகத்தான். ஆனால்இ அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிப்பதால்இ கனடாவுக்கு வரும்போதேஇ கல்வி கற்கும் நோக்கத்துடன் வராமல்இ பணி செய்யும் நோக்கத்துடன் வருபவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர்.
இந்தஇ வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யும் அனுமதிஇ செப்டம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும். செப்டம்பருக்குப் பிறகு அதை 24 மணி நேரமாக அரசு அதிகரிக்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.