குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு ஒரு கோடி ரூபாய இலஞ்சம் பெற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாராக (ஊஐனு) நடித்து ஒரு கோடி ரூபா கப்பம் பெற்ற நான்கு பேரை மே மாதம் 14ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானதுஇ இன்றையதினம் (30.04.2024) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுஇ கொழும்பு (ஊழடழஅடிழ) கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றை சோதனையிட்ட சந்தேக நபர்கள்இ அங்கிருந்து ஒரு கோடி 20 லட்சம் ரூபா பணம் மற்றும் 3இ500 டொலர்கள் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன்இ குறித்த வீட்டில் பணியாற்றிய இந்திய நபரொருவரின் கடவுச்சீட்டையும் சந்தேக நபர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டு உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள்இ அவருக்கு எதிரான விசாரணைகளை கைவிட வேண்டுமாயின் நான்கு கோடி ரூபா கப்பம் தருமாறு நிபந்தனை விதித்துள்ளனர்.
எனினும்இ நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் கப்பத் தொகை மூன்றரைக் கோடியாக குறைக்கப்பட்டதுடன்இ நேற்றைய தினம் அதன் ஆரம்பத் தொகையாக ஒரு கோடி ரூபாவை வழங்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் படி
இந்நிலையில்இ பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த முறைப்பாட்டின் பேரில்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் மறைந்திருந்துஇ கப்பம் பெற வந்தவர்களை கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து, சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.