மே 2 ம் தேதி மீண்டும் ஒரு சூப்பர் புயல் வீச வாய்ப்பு உள்ளதா? சாத்தியக்கூறுகள் இருப்பதாக NCM தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள் வியாழக்கிழமை நிலையற்ற வானிலை மற்றும் மழையை எதிர்பார்க்க வேண்டும். தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளின் படி, வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விளைவாக நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும். வெப்பநிலையும் கணிசமாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும், சில பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடா பகுதியில் கடல் சீற்றம் முதல் மிக கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் கொந்தளிப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.