Bootstrap

தனது 91 ஆவது வயதில் காலமானார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்.

கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழீழத்தின் பால் கொண்ட பற்றின் காரணமாகத் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றினார்.

தமிழீழக் கொள்கைகளில் தீவர ஆதரவாளராகச் செயற்பட்ட ஈழவேந்தன் 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாத காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறிபோயிருந்தது.

இதனையடுத்து, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியிருந்த நிலையில், நேற்றிரவு (April 28, 2024) ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc