பொதுமக்கள் மேற்கொள்ளும் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கையொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன் பிரகாரம் பொதுமக்கள் இனிவரும் காலங்களில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக இணையத்தளம் ஊடாக பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைக்காக உரிய பொலிஸ் நிலையத்தில் இருந்து உத்தியோகத்தர்கள் குழுவொன்று முறைப்பாட்டாளர் தொடர்பில் தகவலறிய முகவரிக்கே வகுகைத்தருவார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தின் 24 பொலிஸ் நிலையங்களில் இந்த நடவடிக்கை பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் அதனை விஸ்தரிக்கப்படும் என பொலிஸார் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.