2022ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 360 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ரூபாவின் பெறுமதியின் பலன் படிப்படியாக மக்களுக்கு கிடைக்கும். ரூபா பெறுமதி வலுவடைந்தமையினால், கடனை திருப்பிச் செலுத்தும் சுமை குறைவடைந்தமையும் இங்கு முக்கியமானது.
சந்தை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உத்தியோகபூர்வமாக 360 ரூபாவாக அதிகரித்துள்ளது. அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்த விகிதம் 300 என்ற அளவில் பேணப்பட்டு வருகிறது.