வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் (H.E Maged Mosleh) நேற்று (26) இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இலங்கை-எகிப்து ஒத்துழைப்பு மாநாடு (JCTEC) மற்றும் அதன் வரவிருக்கும் அமர்வுகள், உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படக்கூடிய நிலையான நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ எகிப்தில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததுடன், அவ்வாறான இறக்குமதிக்கு ஆதரவளிக்கத் தூதுவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.