கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த சட்டவிரோத போலி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த மாத்திரைகள் உண்மையான மாத்திரைகள் போன்று பொதியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. போலி வயகரா மாத்திரைகளை கொள்வனவு செய்தவர்கள் உடன் அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலாவதியாகும் திகதி பற்றிய விபரங்கள் வழமைக்கு மாறான அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடரிலக்கம் பொதிகளில் அச்சிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போலி மருந்து மாத்திரைகள் உண்மையானவை போன்றே தென்பட்டாலும், அவற்றில் சில வேளைகளில் மருந்துப் பொருட்களே அடங்கியிருக்காது என தெரிவித்துள்ளது.
இவ்வாறான, போலி மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.