அமீரகத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடு குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக NCM தகவல் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலையில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அமீரக் குடியிருப்பாளர்கள் சிலர் அதிகாலையில் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கடற்கரையில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
2.8 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை குடியிருப்பாளர்கள் உணர்ந்தாலும், இந்த நிலநடுக்கம் நாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை எனவும் NCM வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொருத்த வரையிலும், சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகும். இதற்கு முன்பாகவும் பலமுறை இதே போன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.