வாகரையில் முன்னெடுக்கப்படும் இறால் பண்ணை, இல்மனைட் திட்டங்களை எதிர்த்து மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திடடமிட்டு வரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு கூறியும், மட்டக்களப்பு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (2024.04.25) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இயற்கையை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம், இறால் பண்ணை மற்றும் இல்மனைட் கம்பெனிகளை தடைசெய்ய வேண்டும் எனத்தெரிவித்து, பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்பு கூறவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசங்களை முன்வைத்தனர்.