ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என எதிர்க்கடசி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லையென கூறுபவர்களுக்கு வேறு ஏதும் திட்டம் இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.