உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமாண குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அரசியல் வாதிகளின் பொறுப்பல்ல என முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச பதிலளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய கோட்டபஜா ராஜபக்ச தவறிவிட்டதாக கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தவறிவிட்டதாக குற்றச்க்காட்டு எழுந்துள்ளது. ஆனால் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது பொலிஸ், சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறை அமைப்புகளின் கடமையாகும். குறித்த சட்டநடவடிக்கைகள் நடைபெற்று வருவதோடு தாக்குதலுடன் தொடர்புடைய தொன்னூற்று மூன்று (93) பேருக்கு எதிரான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவற்கு பல மாதங்களுக்கு முன்னரே இலங்கை குற்றப்புலனாய்வு துறையினர் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை விசாரித்து வந்தனர். ஏதேனும் தாக்குதல்கள் நடைபெறும் முன் அவர்களை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தவறிவிட்டனர். உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக என்மீது தொடர்ந்தும் குற்றம் சுமத்துவதை மக்கள் கவனமாக பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.