கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதை நாம் கவனித்துவருகிறோம்.
ஆக, புலம்பெயர்தல் கொள்கைகளை மறுசீரமைத்துவிட்டால் வீடுகள் தட்டுப்பாடு குறைந்துவிடுமா?
உண்மையாகவே, கனடாவில் வீடுகள் தட்டுப்பாட்டுக்கு புலம்பெயர்தல்தான் காரணமா? இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிக்கும் பேராசிரியர் Paul Kershaw, வீடு தட்டுப்பாடு பிரச்சினையின் பின்னால் ஒரு மோசமான ரகசியம் உள்ளது என்கிறார்.
2005ஆம் ஆண்டு, ஜனவரி மாத நிலவரப்படி, சராசரியாக வீடொன்றின் விலை 241,000 டொலர்களாக இருந்தது. அதுவே, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று மடங்கைவிட அதிகரித்து, பின் சற்று குறைந்து, 2024 பிப்ரவரியில் 719,400 டொலர்களாக ஆகியுள்ளது.
இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில், வீடுகள் விலை மேலும் 9 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என சம்பந்தப்பட்ட துறை கணித்துள்ளது.
தற்போதைய சூழலில், அனைவருக்கும் வாழ்வதற்கு வீடு கிடைக்கவேண்டும் என்பதைவிட, ரியல் எஸ்டேட் துறையில் எப்படி லாபம் பார்க்கலாம் என்ற மன நிலைமைதான் காணப்படுகிறது என்கிறார், Paul Kershaw.
Source: Royal Bank of Canada (CBC)
அதாவது, தங்களுக்கு வாழ ஒரு வீடு தேவை என்பதற்காக வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து, வீடு வாங்கி விற்பதை தொழிலாக கொண்டுள்ளவர்கள்தான் அதிகம் வீடுகளை வாங்குவதாக கனடா வங்கி தெரிவித்துள்ளது.
வீடுகளை வாக்கிவைத்துக்கொண்டு அதை விற்பதன் மூலம் லாபம் பார்ப்பவர்கள், வீடுகள் விலை அதிகமாகவேண்டும் என்றுதானே எதிர்பார்ப்பார்கள்?
(CBC)
அரசியல்வாதிகள் சொல்வதைப்போல, அவர்களால் ஒருபோதும் வீடுகள் விலையை குறைக்கமுடியாது. இந்த வீடு வாங்கி விற்றல் விடயத்தால், சட்டத்தரணிகள், கட்டுமானப் பணி செய்வோர் என பல துறையினருக்கு லாபம் உள்ளது. அத்துடன், அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பயன் உள்ளது.
Source: Bank of Canada (CBC)
ஆக, வீடுகள் விலை உயரவேண்டும், அதை விற்று லாபம் பார்க்கவேண்டும் என்ற மன நிலைமையில் செயல்படுவோர் உள்ளவரை வீடுகள் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்கிறார்கள் துறைசார் பிரச்சினைகளை நன்கறிந்தவர்கள்.
Darren Calabrese/The Canadian Press