வீடு தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியல் நகரில் 763 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
வீடு தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியல் நகரில் 763 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக, நேற்று, கனெடிய பெடரல், மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
சுமார் 310 மில்லியன் டொலர் செலவில், 12 திட்டங்களாக குடும்பங்கள், மூத்த குடிமக்கள், தனிமையில் வாழ்வோர் மற்றும் வீடற்ற இளைஞர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
Yohan Hache / Global News
ஒரு காலத்தில், நல்ல வாடகைக்கு வீடுகள் கிடைக்கும் நகரம் என பெயர் பெற்ற மொன்றியலில் இப்போது வீடு பற்றாக்குறை காணப்படுகிறது. ஆகவே, வீடு பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இதுவரை, குறிப்பிட்ட காலத்துக்குள் வீடுகளைக் கட்ட வரையறை கொடுக்கப்படாத நிலையில், இம்முறை 12 மாதங்களுக்குள் இத்திட்டம் கையெழுத்தாகவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், சுமார் மூன்று ஆண்டுகளுக்குள் மக்கள் வாழ வீடுகள் தயாராகிவிடும் என்ற நிச்சயத்தன்மை உருவாகியுள்ளது என்கிறார் கியூபெக் மாகாண வீட்டு வசதித்துறை அமைச்சரான France-Élaine Duranceau.