Bootstrap

கனடாவில் கொல்லப்பட்டவர் நினைவாக விளையாட்டு மைதானம்! நிதி திரட்டும் கிராம மக்கள்

கனடாவின் சஸ்காட்சுவான் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவரை கௌரவிக்கும் விதமாக விளையாட்டு மைதானம் அமைக்க நிதி திரட்டல் செய்யப்படுகிறது.

 விளையாட்டு மைதானம் அமைக்க நிதி திரட்டல்

கனடாவின் சஸ்காட்சுவான்(Saskatchewan) மாகாணத்தில் உள்ள வெல்டன்(Weldon) என்ற கிராமம், 2022 இல் நடந்த படுகொலை தாக்குதலில் உயிரிழந்த ஒருவரை கௌரவிக்கும் வகையில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2022ம் ஆண்டு மைல்ஸ் சாண்டர்சன்(Myles Sanderson) என்ற நபர் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டனில் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதில் வெல்டன் கிராமத்தைச் சேர்ந்த வெஸ்லி பெட்டர்சன்(Wesley Petterson) என்பவரும் ஒருவர்.இந்நிலையில் வெஸ்லி பெட்டர்சன் நினைவாக ஒரு புதிய விளையாட்டு மைதானம் அமைக்க அந்த கிராம மக்கள் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

வெல்டன் கிராம மக்கள் குழுவினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதற்கு அருகில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் கிரீ நேஷன் (James Smith Cree Nation) இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

$150,000 நிதி திரட்ட முயற்சி

குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடவும், வெஸ்லி பெட்டர்சனை நினைவுபடுத்தும் விதமாகவும் மகிழ்ச்சியான விளையாட்டு மைதானத்தை(playground) உருவாக்க அவர்கள் $150,000 நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

இது குழந்தைகள் சிரிக்க, கற்றுக் கொள்ள, வளரக்கூடிய இடமாக இருக்கும். துன்பத்திற்கு பிறகு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வளர்க்கும் என்று நம்பப்படுகிறது.

Saskatchewan playground mass stabbing victim, Weldon Saskatchewan playground memorial, Wesley Petterson playground Saskatchewan,

 

வெல்டன் குழு அல்லது உள்ளூர் ஊடகங்கள் மூலம் இந்த நிதி திரட்டும் பணியின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc