மியான்மரில் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த மீனவர்கள் மியான்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களுக்கு 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. என்றாலும், இலங்கை அரசாங்கம் தொடர்ந்து விடுத்துவந்த கோரிக்கையின் பிரகாரம் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் விரைவில் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார்கள் எனவும் இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்..