"தமிழ்க் கட்சிகள், அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்." என இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.
மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் எந்த விதத்தில் சாத்தியம்? இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும்? என்று எமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.