மன்னார் பதிய நிருபர்
பிறந்திருக்கின்ற குரோதி என்கிற இந்த புதிய வருடமானது அனைவருடைய வாழ்விலும் நல்ல வளமும் அமைதியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக மலர வேண்டும்.என இன்றைய நாளிலே பிறந்திப்பதாக மன்னார் இந்து மத பீடத்தின் தலைவர் தர்மகுமார குருக்கள் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
குரோரி என் கின்ற இந்த புதிய வருடமானது அனைவருடைய வாழ்விலும் நல்ல வளமும் அமைதியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக மலர வேண்டும் என்று மன்னார் இந்து மத கூட்டத்தின் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைய பிறந்திருக்கின்ற இந்த குரோதி வருடமானது நேற்றைய தினம் இரவு பிறந்து இருந்தாலும் கூட இன்றைய நாளிலே தான் இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. காலை சூரிய உதயத்திற்கு பிற்பட்ட காலம் தான் எங்களுடைய சித்திரை புத்தாண்டினுடைய ஆரம்ப நாள்.
சூரியனது மேட ராசியில் பிரகாசிக்கின்ற காலம் இந்த சித்திரை புத்தாண்டாக சைவத் தமிழர்களாலே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் வாழ்கின்ற சைவத் தமிழ் பெருமக்கள் இந்த சித்திரை புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
அதிகாலையிலே மருத்து நீர் வைத்து தோய்ந்து புத்தாடைகள் அணிந்து ஒவ்வொரு ஆண்டும் இன்று புதிதாய் பிறந்தோம் என்ற வகையில் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளும் சிறப்பானதாகவும் நல்ல முயற்சி உள்ளதாகவும் அமைவது இந்த புத்தாண்டு காலங்களில் முக்கிய அம்சமாகும்.
புத்தாடைகள் அணிந்து ஆலய வழிபாடுகள் செய்து பெரியோர்களுடைய தரிசனங்கள் பெரியவர்களுடைய ஆசிகள் பெற்று நிறைகுடங்கள் பூரண கும்ப கங்கள், மங்களப் பொருட்களை எல்லாம் வழங்கி பெரிய குடை ஆசையோடு இந்த பஞ்சாங்கத்தின் உடைய புதிய பலன்களை கேட்டும் வாசித்து அறிந்து இந்த புதிய ஆண்டில் எல்லோரும் இன்புற்று வாழ்வதற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்