கனடாவில் எட்மண்டன் பகுதியில் கவநாக் போல்வார்டு என்ற இடத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே காயமடைந்து விழுந்தனர்
ஏறக்குறைய 50 பேர் கூடியிருந்தபோது, இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. அவர்களில் பலர் தெற்காசிய வீடு கட்டுமான சமூகத்தில் உறுப்பினர்கள் ஆவர்.
இதனைத் தொடர்ந்து, எட்மண்டன் நகர முன்னாள் கவுன்சிலராக இருந்த மற்றும் எட்மண்டன் காவல் பணியின் முன்னாள் அதிகாரியான மொகிந்தர் பங்கா சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டார்