நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நுகர்வோர் கடன் சுட்டியில் சாதக நிலை பதிவாகியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டாகவே நுகர்வோர் கடன் சுட்டி குறைந்த பெறுமதிகளை பதிவு செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்துடன் ஒப்பீடு செய்யும் போது சாதக நிலைமைகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது கடன் நிலைமைகள் குறைவடைந்துள்ளதாக கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நாட்டில் தொடர்ச்சியாக வட்டி வீதம் அதிகரித்துச் செல்லும் நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்க நிலைமைகள் குறித்து கனடியர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக சமூகக் கடப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைக்காக செலவிடப்பட்ட தொகைகளை மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த நாள் விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றில் பங்குபற்றுவதனையே மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்