வெறும் தேசிய உணர்வை வாய்ப்பேச்சாக கொள்ளாமல் விடுதலைப்போராட்டங்களுக்கு எவ்வாறு இரு சமூகங்களின் ஒற்றுமை ஆரம்பத்தில் இருந்ததோ அவ்வாற மீண்டும் துவங்க வேண்டும். ஈழம் என்று முஸ்லிம்களை ஒதுக்கிவைத்தல் புகழுக்காக ஊடகங்கள் நடாத்தி தமக்கு தாமே பொன்னாடை போற்றிக்கொள்ளுதல், அகதி அந்தஸ்து கோரலுக்காக மாவீரர்களின் உணர்வுகளை அடகு வைத்தல், வெறும் வாய்ப்பேச்சில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை குறித்து பேசிவிட்ட பின்னால் சென்று அவன் காட்டிக்குடுத்தவன் என்று சொல்லாடல்களை செய்தல், இயங்கு நிலையிலுள்ளவர்களை மௌனிக்க செய்தல் போன்ற அகோர செயற்பாடுகளே இன்று எமது பின்னடைவுகளுக்கு காரணம்.
அமைப்புகள் இன்று வெறுமனே புகைப்படங்களுக்காக இயங்குகிறது, நிகழ்வுகளை நடாத்தி பணம் சம்பாதித்து புலம்பெயர் தேசங்களில் வீடுமனை கட்டுதல், களத்தில் நின்றவர்கள் இன்றும் கிளிநொச்சி முல்லை வீதிகளில் சர்பத் உம், கச்சானும் விற்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை அடகுவைத்து நீங்கள் உடுத்தும் ஆடைகளுக்கும் உங்களுக்கும் வெட்கம் மானம் சூடு சுரணை இல்லையா? 2009க்கு பிறகு தேசத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த அடிப்படை அறிவாவது உள்ளதா உங்களுக்கு?
நீங்கள்தான் ஆளவேண்டும் என்றால் அதுதான் விடுதலைப்போராட்டமா? உங்களுக்கு கூசவில்லையா? தலைவரின் புகைப்படத்திற்கு மாலைபோட்டு வீடுகளில் மட்டும் தொங்க வைத்துவிட்டு அதற்கு முன்னால் இருந்து மதுக்கோப்பைகளுக்குள் மூழ்கி கிடக்கிறீர்கள். வெளியில் வந்து வெறும் வேசமிட்டு ஈழம் பேசுகிறீர்கள். உங்களை தோலுருக்கும் காலம் வந்து விட்டது.
இனி நாங்கள் இளைஞர்கள் எழுதுவோம். பின்னால் வரும் தோழமைகள் வாருங்கள். எங்களை புலனாய்வார்கள் என்றாலம் பரவாயில்லை கூலிகள் என்றாலும் பரவாயில்லை. உங்களை விட ஒரு படிமேலே நின்று உயிர்களை பலிகொடுத்து அந்த இரத்த கண்ணீரில் வாழ்கிறோம் எம் தேச மக்களின் சமாதான மனித உரிமை பணிகளுக்காக நாங்கள் எங்களை; உயிர்களை அடகுவைத்த போராடியுள்ளோம். மிரட்டல்கள் கைதுகள் எவற்றிற்கும் அஞ்சாது தேசத்தில் இருந்து பணிபுரிந்தோம் உங்களை போல ஓடிப்போய் தஞ்சம் கோரி முக்காடு இட்டுக்கொள்ளவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அன்பு முஸ்லிம்களே, ஹிந்துக்களோ, கிறிஸ்தவர்களே நாம் தமிழர்கள்! எங்கள் மொழி தாய் மொழி தமிழ் முப்பாட்டன் எல்லோருக்கும் வரலாறு வரையறை உள்ளது. ஆதாமும் அஹ்வாவும் வந்த காலம் தொட்டு எமது துவக்கம் இருக்கிறது. அன்றிலிருந்து தமிழ்தான் எங்கள் மூச்சு.