தமிழ் சமூக மைய கட்டிட நிதிக்காக ஒரு மில்லியன் டாலருக்கு அதிகமான நன்கொடையை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் (CTCC) வழங்கியுள்ளது.
கடந்த வார விடுமுறையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
ஒரு மில்லியன், முப்பத்தைந்தாயிரம் டாலர் ($1,035,000) நன்கொடையை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தமிழ் சமூக மைய கட்டிட நிதிக்காக வழங்கியுள்ளது
விருது வழங்கும் விழாவின் சிறப்பம்சமாக தமிழ் சமூக மையத்திற்கு இந்த காசோலை வழங்கப்பட்டது.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன உறுப்பினர்களின் தாராள மனப்பான்மையின் குறியீடாக முக்கியமான சமூக முன்முயற்சியை ஆதரிப்பதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அரி A. அரியரன் தேசியத்திடம் தெரிவித்தார்