அதிக வாக்குப்பதிவு காரணமாக முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டதை விட முன்னர் ஆரம்பிக்கவுள்ளது.
கனடிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவான முன்னெப்போதும் இல்லாத அதிகரித்த முன்கூட்டிய வாக்குகளைக் கருத்தில் கொண்டு, அந்த வாக்குகளை எண்ணுவது வழக்கத்தை விட முன்னதாகவே ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்கெடுப்பில் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் இம்முறை வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இம்முறை முன்கூட்டிய வாக்கெடுப்பில் 7.3 மில்லியன் கனடியர்கள் வாக்களித்தனர் என கனடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
2021 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முன் கூட்டிய வாக்கெடுப்பில் வாக்களித்த 5.8 மில்லியனை விட இது அதிகமானதாகும்.
இது 2021 பொதுத் தேர்தலின் போது முன்கூட்டியே வாக்களித்தவர்களிடமிருந்து 25 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
வழமையாக தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முன்கூட்டிய வாக்குகள் எண்ணப்படும்.
இம்முறை, பெரும்பாலான தொகுதிகளில் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரம் முன்னதாகவே ஆரம்பிக்கவுள்ளது.
இந்த மாற்றத்திற்கு கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்தார்.
வாக்குச்சீட்டில் 90 வேட்பாளர்களைக் கொண்டிருக்கும் Carleton தொகுதியில் வாக்குப்பதிவு முடிவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னர் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தத் தொகுதியில் Conservative தலைவர் Pierre Poilievre போட்டியிடுகிறார்