கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றும் யோசனையை தமது தொலைபேசி அழைப்பில் Donald Trump எழுப்பியதாக Mark Carney உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய வர்த்தகப் போர் கருத்துக்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் 33-வது நாளான வியாழக்கிழமை (24)Liberal கட்சித் தலைவர் Mark Carney உரையாற்றினார்.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி சில வாரங்களுக்கு முன்னர் பேசியபோது எழுப்பியதை Mark Carney தனது உரையில் உறுதிப்படுத்தினார்.
இரு நாட்டின் தலைவர்களும் March 28-ஆம் திகதி தொலைபேசியில் உரையாடினர்.
இந்த உரையாடலில் கனடாவின் இறையாண்மையை Donald Trump மதித்ததாக Mark Carney தெரிவித்திருந்தார்.
ஆனாலும் இரு தலைவர்களும் பேசியபோது கனடா ஒரு மாநிலமாக மாறும் யோசனையை Donald Trump எழுப்பியதாக ஆதாரங்களில் அடிப்படையில் இந்த வாரம் செய்தி வெளியானது.
இந்த விடயம் குறித்து வியாழனன்று நிருபர்கள் Mark Carney-யிடம் கேள்வி எழுப்பினர்.
கடந்த மாதம் நடந்த உரையாடலை விவரித்தபோது கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநில மாற்றும் Donald Trump-பின் யோசனை குறித்து ஏன் தெரிவிக்கவில்லை என ஊடகங்களால் வினாக்கள் எழுப்பப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதியை யார் சிறப்பாக எதிர்த்து நிற்க முடியும் என்ற கேள்வியை சுற்றியே Liberal கட்சியினர் இந்தத் தேர்தலை வடிவமைத்துள்ளனர்.
Donald Trump மிகவும் மதிக்கும் தலைவர் தான் என Mark Carney பலமுறை கூறியுள்ளார்.
தேர்தலுக்கு சில தினங்கள் உள்ள நிலையில் கனடா அமெரிக்க மாநிலமாக மாற வேண்டும் என்ற கருத்தை அமெரிக்க ஜனாதிபதி புதன்கிழமை மீண்டும் எழுப்பினார்