பல்லின சமூக நிகழ்வுகளுக்கு Ontario மாகாண அரசாங்கம் இந்த ஆண்டு 20 மில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்துள்ளது.
Ontario மாகாண சுற்றுலாத்துறை, கலாசார அமைச்சர் Stan Cho இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வியாழக்கிழமை (24) வெளியிட்டார்.
Ontario மாகாணம் முழுவதும் இந்த வருடம் சுமார் 350 நிகழ்வுகளையும், பண்டிகை கொண்டாட்டங்களையும் நடத்துவதற்கு Ontario அரசாங்கம் இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
இதில் தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கான நிதியுதவியும் அடங்குகிறது.
கனடிய தமிழ் வானொலி (CTR) நடத்தும் ‘நட்சத்திர விழா’ நிகழ்வுக்கு 55,000 டொலர் நிதி இந்த நிதியுதவி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘நட்சத்திர விழா’வை முன்னெடுக்கும்(CTR) இரண்டாவது வருடமாக இந்த நிதியுதவியைப் பெறுகின்றது.
தமிழ் மக்களின் கலை, கலாசார, நிகழ்வுகளை ஊக்குவித்து அரசாங்கம் வழங்கி வரும், இந்த நிதியுதவிகளுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என CTR பணிப்பாளர் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கும், மாகாண பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பல்லின சமூகங்களின் பாரம்பரிய, கலை, கலாசார நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்கும் இந்த உதவிகளை Ontario அரசாங்கம் வழங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது