உலகின் மிகப் பெரிய கத்தோலிக்க மதத் தலைவராகவும், கனடா மக்கள் மனதில் மறக்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தியவராகவும் பாப்பாண்டவர் பிரான்சிஸ் நினைவில் நீடிக்கப்போகிறார் கனடிய மக்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
பிறமத இன மக்களுடனான உறவை புதுப்பித்தவர் என்றே மத அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். வாடிகன் அறிவிப்பின் படி, 88-வது வயதில் அவர் கடந்த திங்கட்கிழமை உயிர் நீத்ததாக கூறியுள்ளது.
2021-ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, கனடாவில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.1 கோடியாகும். இது மத அங்கீகாரம் இல்லாதவர்களை அடுத்தபடியாக அதிகமாக உள்ளது.
இந்த பள்ளிகளில் 150,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குழந்தைகள் பல தலைமுறைகளாக கட்டாயமாக படிக்க வைக்கப்பட்டனர். அவற்றில் சுமார் 60% பள்ளிகளை கத்தோலிக்க தேவாலயம் நிர்வகித்து வந்தது.
குறித்த காலப் பகுதியில் பழங்குடியின சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பாப்பாண்டவர் மன்னிப்பு கோரியிருந்தார்.
கனடாவிற்கு நேரடியாக விஜயம் செய்து இவ்வாறு பாப்பாண்டவர் மன்னிப்பு கோரியமை தொடர்பில், கனடிய மக்கள் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்