விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கனடா அரசு, தனியார் துறையில் பணியாற்றுவோருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளது.
தற்காலிக வேலை செய்வோருக்கும் இந்த ஊதிய உயர்வு பொருந்தும் என்பதால், கனடாவில் கல்வி கற்கும் இந்தியர்கள் உட்பட ஏராளமானோர் இந்த ஊதிய உயர்வால் பலனடைய இருக்கிறார்கள்.
இம்மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள தனியார் துறை நிறுவனங்களில் பணி செய்வோருக்கான குறைந்தபட்ச ஃபெடரல் ஊதியம், ஒரு மணி நேரத்துக்கு 17.30 கனேடிய டொலர்களிலிருந்து 17.75 டொலர்களாக உயர்கிறது.
இலங்கை மதிப்பில் பார்த்தால், ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம், 3,608.27 ரூபாயிலிருந்து 3,702.13 ரூபாயாக உயர்ந்துள்ளது