ஒன்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் வாக்களித்து வெறும் இரண்டு மாதங்களுக்கு பிறகு, மீண்டும் ஏப்ரல் 28 ஆம் திகதி கனடாவின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க மக்கள் வாக்களிக்க செல்ல உள்ளனர்.
ஒன்டாரியோ மாகாண தேர்தலுக்குப் பிறகு அதே வருடம் கனடா பொதுத் தேர்தல் நடைபெறுவது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். இதற்குப் பிறகு கடைசியாக 2011-ஆம் ஆண்டில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகியிருந்தது.
இந்நாள் வரையில் வெளியான தற்காலிக தேர்தல் தகவலின்படி, கடந்த பெப்ரவரி 27 அன்று நடைபெற்ற ஒன்டாரியோ மாகாண தேர்தலில், பதிவு செய்த வாக்காளர்களில் 45.4% — எனும் 50,23,587 பேர் தான் வாக்களித்தனர்.
இது 2022 தேர்தலின் 44% வாக்குப்பதிவைச் சற்று மேலோங்கி இருந்தது. குளிர்கால வானிலை மற்றும் போட்டி இல்லாத சூழல், குறைந்தளவு வாக்களிப்பு வீதத்திற்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
மாறாக, பொதுத் தேர்தல்களில் ஒன்டாரியோ வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளை பதிவு செய்திருப்பது கடந்த ஆண்டுகளின் தரவுகளில் தெரிய வருகிறது.
2011, 2015, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஒன்டாரியோ மாகாண வாக்குப்பதிவு வீதம் முறையே 70%, 76%, 77% மற்றும் 75% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவை 51வது மாநிலமாக இணைப்பதற்கான அச்சுறுத்தல், குறைந்தது வாக்காளர்களிடையே பெரும் கரிசனையையும் மற்றும் ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.
மேலும், அவரது வர்த்தக போர் — கனடா தயாரிக்கும் உற்பத்திகள் மீது 25% சுங்க வரி விதிப்பு, குறிப்பாக, உருக்கு, அலுமினியம், கார்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிகள் ஆகியவை மக்கள் சிந்தனையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன