இதுவரை காணாமல் போனோர் தொடர்பில் ஓ எம் பி அலுவலகத்தில் சுமார் 23 ஆயிரத்து 352 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் 3,742 முறைப்பாட்டு விண்ணப்பங்கள் முப்படையினர் தொடர்பில் கிடைக்கப்பெற்றதாக ஓஎம்மி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்தில் ஓ எம் பி அலுவலகப் பிரதிநிதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
ஓ எம் பி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 23,352 முறைப்பாடு 16 ஆயிரத்து 966 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2000 ஆண்டுக்கு முன்னர் 2000 ஆண்டுக்குப் பின்னர் என இரண்டு முக்கிய காலகட்டங்களை அடிப்படையாக வைத்து குறித்த விசாரணைகள் இடம் பெற்றது.
2000 ஆண்டுக்கு பின்னர் 7406 விண்ணப்பங்களும் 2000 ஆண்டுக்குப் பின்னர் 9560 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றது.
6449 முறைப்பாட்டு விண்ணப்பங்கள் பூர் வாங்க விசாரணை முடிவுறுத்தப்பட்டு 2604 காணாமல் போன சான்றிதழ்களும் 437 மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணம் மூன்று விடயங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட நிலையில் நாங்கள் மரணச் சான்றிதழை வருமாறு கூறியது கிடையாது.
சிலர் தமது சுய விருப்பின் பெயரில் நிவாரணத்தை பெறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இடைக்கால நிவாரணத்திற்காக 4408 பேர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் 3787 பேருக்கு 2 இலட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது