2011 ஆம் ஆண்டு இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பாக சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (18) நிர்ணயித்துள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.