அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சியில் இருந்து 64 பேருடன் பயணித்த விமானமொன்று அந்த நாட்டு இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் பயணித்ததுடன் உலங்கு வானூர்தியில் 3 இராணுவ உத்தியோகத்தர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமான பொட்டோமெக் ஆற்றில் வீழ்ந்ததாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் காவல்துறையினரும் மீட்புப் பணியாளர்கள் ஆற்றில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நேரப்படி இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.