பேரீத்தம்பழம் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சு இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பேரீத்தம்பழத்தின் மீதான தற்போதைய விசேட பண்ட வரியான 200 ரூபாவை கிலோவுக கு ஒரு ரூபாவாகக் குறைத்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
மேலும் குறித்த பண்ட வரிக் குறைப்பு இன்று (28) முதல் 2025 மார்ச் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.