நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார்.
யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது அங்கு விஜயம் செய்திருந்த நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தான் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
” ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம்.”
அதனை பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள்.ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது.
நெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தது வீண். எங்களை வர சொன்னால் நாங்கள் வருவோம் அல்லவா.எரிபொருளை நிரப்பிவிட்டு பெலியத்தவுக்குச் சென்றது வீண்தானே என்றார்