(எஸ்.அஷ்ரப்கான்)
தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறும், இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக முன்றலில் (12) இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பல்கலைக்கழக வளாக பிரதான வீதிக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
இங்கு தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறும்,
இதில் போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து, தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக அழைக்கவும், மாணவர்களை துன்புறுத்தாதே, மணவர்கள் மீதான அடக்கமுறைகளை நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.