கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளனர். கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.