1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவிபியினருக்கு நீதி வழங்குவதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் இடம்பெறலாம் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
1988-89 கிளர்ச்சியின் போது கொல்லப்ட்ட ஜேவியினருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் எவையும் தற்போது இடம்பெறாத போதிலும் எதிர்காலத்தில் இதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
மார்க்சிச இடதுசாரி கட்சியான ஜேவிபி தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதான கட்சி.
இந்த நிலையி;ல 1988-89 ஜேவிபிகிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிற்காக நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுமா என்ற கேள்விக்கு இதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் என ஜேவிபியின் பொதுச்செயலாளரும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நாங்கள் இதுவரை விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை,எனினும் அவசியமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ள அவர் ஜேவிபி எங்கள் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்,என்ன நடக்கவேண்டும் என்பது குறித்து அவர்கள் அவசியமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் அதேவேi ஆளும்தரப்பு என்ற வகையில் இடைக்காலவரவு செலவுதிட்டம் குறித்தும் கவனம் செலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.