மேதகு பிரபாகரனை தனது கடவுள் என்று கூறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தினார்.
நேரலை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும், அவர் 1987ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பொலிஸில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"எனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் பொலிஸ் அதிகாரி. அவர் நாட்டில் எல்லா இடங்களிலும் பணிபுரிந்தார். 1983 கலவரத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்திற்குச் சென்று இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு எதிராக அக்காலத்திலிருந்து விடுதலைப் பயணத்தைத் தொடங்கினார்," என்று அவர் கூறினார்.
"நாங்கள் இனவாதிகள் அல்ல. நாங்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த மாதம் போரின்போது உயிரிழந்த உயிர்களை நினைவுகூர்கிறோம். நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல, எங்களைக் கொன்ற சிங்கள அரசுக்கு மட்டுமே எதிரானவன் என்று என் கடவுள் மேதகு பிரபாகரன் கூறியுள்ளார்" என்று எம்.பி அர்ச்சுனா கூறினார்