அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதற்கு அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம் என அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை ஆகியோர் தெரிவித்தனர்.
ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பல தடைகளுக்கு மத்தியிலும் சிறப்பாக நடாத்தி வந்தோம்.
அந்த வேளையில் சில அரசியல்வாதிகள் வந்து இந்த நிகழ்வை நாங்கள் தான் செய்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னகாரர்கள் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வந்து இதனை செய்வார்கள்.
கடந்த வருடம் ஒரு நபரை வைத்து இந்த மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தலை குழம்பினார்கள்.அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
27ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு சிரமதானம் செய்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றோம்.
எனவே இந்த அரசியல் கட்சிகள் வந்து பொய்யான அரசியல் பிரச்சாரங்கள் செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும்.
மேலும் எதிர்வரும் கார்த்திகை 27 அன்று நாங்கள் இந்த புண்ணிய பூமியில் எங்களது சரீரத்தின் ஒரு பாகமாக எங்களுக்காக மண்ணில் மடிந்த மாவீரர்களை நாங்கள் நினைவு கூருவதற்கு காத்திருக்கின்றோம். மக்களும் எங்களோடு ஒன்று சேருங்கள் என அழைப்பு விடுத்தார்