ருஹுனு பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் இன்று (19) முதல் கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி சுஜீவ அமரசேன பதவி விலகும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என விரிவுரையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
பல ஆண்டு காலமாக இந்த பல்கலைக்கழகம் நாளுக்கு நாள் பின்னடைவை நோக்கி செல்வதற்கு பொறுப்பேற்று துணைவேந்தர் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பணியிலிருந்து விலகி இருத்தல் மற்றும் பணிப் புறக்கனிப்பு, எதிர்ப்பு ஊர்வலம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
உபவேந்தரை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி பொதுத் தேர்தலுக்கு முன்னர் ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் ரு{ஹனு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இல்லாவிடின் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஒரு வாரத்துக்கு மேல் கடந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உபவேந்தரை பதவி நீக்கம் செய்யும் வரை தாம் பணிப்புறக்கணிப்பு மற்றும் தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக விரிவுரையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.