யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனுடன் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலை நேர்த்தியாக நடத்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கனடாவில் வாழ்ந்த வண்ணம் பல்வேறு மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களுக்கான பழைய மாணவர் சங்கமானது மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி M. மயிலாசனும் அவரது அமைபபும் , இந்நிகழ்வு சிறப்புறவும் பயனுள்ள வகையிலும் இடம்பெற தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர். அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் அங்கு கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு. யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.
மேற்படி கருத்தரங்கானது பல விடயங்களை எமக்கு சுட்டிக்காட்டியது. நமது தாய் மண்ணின் ஒரேயொரு மருத்துவ பீடத்தின் தலைவர் தான் அந்த பீடத்திலிருந்து பல வைத்தியப் பெருந்தகைகளை உருவாக்குவதற்கு உழைத்து வரும் அதேவேளை தனக்கு வெளிநாடுகளில் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி கனடாவிற்கு வருகை தந்து பல பல்கலைக் கழகங்களுக்குச் சென்று அங்கு இயங்கிவரும் மருத்துவ பீடங்களின் சிறப்புக்களை நேரடியாகப் பார்வையிட்டு தனது அந்த அனுபவங்களை தமது தாய் மண்ணின் மருத்துவ பீடத்தின்செயற்பாடுகளில் பிரயோகித்து அந்த பீடம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று அக்கறை உணர்வோடு தன் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் நவீன உபகரணங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்கான உதவிகளை பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுச் செல்வதும் அவரது கருத்துப் பரிமாற்றத்தின் போது நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
மேலும் தமது நுண்ணறிவை தகுந்த முறையில் பயன்படுத்தி விரிவான உரையொன்றை தகுந்த தரவுகளுடன் ஆற்றி, யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னேற்றத்தில் எமது புலம்பெயர்ந்தோர் எவ்வாறு செயற்திறனாக பங்குபற்றி பங்களிக்க முடியும் என்பதற்கான பெறுமதியான தகவல்களை பீடாதிபதி சுரேந்திரகுமாரன் வழங்கினார். என்றால் அது மிகையாகாது. மிகுந்த அடக்கமும் ஆற்றலும் கொண்டவராக விளங்கும் பேராசிரியர் சுரேந்திரகுமாரன் அவர்கள் அன்றை நிகழ்வின் 'கதாநாயகனாக' விளங்கி அனைவராலும் கவரப்பட்டார் என்பது உண்மையே.
அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பங்கானது வைத்தியர்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவும் மருத்துவ சேவை தொடர்பான குறைபாடுகளையும் நீக்குவதற்கும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும். குறிப்பாக வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அவர்களுக்கு இலவசமாகவோ அன்றி குறைந்த கட்டணத்திலோ வைத்திய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை நன்கு வெளிப்படுத்தினார். அத்துடன் சமூகத்தின் மீதான பங்கு பற்றி உரையாற்றிய : பேராசிரியர். சமூக மேம்பாட்டில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் செயலூக்கமான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை சபையோர் உணர்ந்து கொள்ளும் வகையில் வலியுறுத்தினார்.முவடமாகாணத்தில் பிறப்பு வீதம் குறைதல் மற்றும் இறப்பு அதிகரிப்பு: வடமாகாணத்தில் குறையும் பிறப்பு வீதம் மற்றும் இறப்பு அதிகரிப்பு தொடர்பான சவால்கள் குறித்து பீடாதிபதி கலந்துரையாடியதுடன், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியமான உத்திகளையும் ஆராய்ந்தார்.
முக்கியமாக உலகளாவிய ஆரோக்கியத்திற்கான பங்களிப்பு: யாழ் மருத்துவ பீடத்துடன் கூட்டு முயற்சிகள் மூலம் உலகளாவிய சுகாதார முன்முயற்சிகளுக்கு புலம்பெயர்ந்தோர் பங்களிப்பதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கும் வகையில் காத்திரமான தரவுகளுடன் தனது உரையைத் தொடர்ந்தார் மருத்துவ பீடாதிபதி அவர்கள்.
உலக சுகாதார அமைப்பினால் (WHO) ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண ஆரோக்கியமான நகரத் திட்டம் மற்றும் இந்த முயற்சிக்கு எமது புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு தங்கள் ஆதரவை வழங்கலாம் என்பது தொடர்பான விளங்கங்;களை மருத்துவ பீடாதிபதி சுரேந்திரகுமாரன் வழங்கினார்.
மேலும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கு கிடைத்துள்ள உதவிகள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு: மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடனான தற்போதைய கூட்டுப்பணிகள் மற்றும் இணைந்து பணியாற்றும் வழிகள் பற்றிய தகவல்களும் பேராசிரியர் அவர்களினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மருத்துவத்துறையின் மரபியல் பிரிவு மற்றும் மேமோகிராம் அலகு போன்ற குறிப்பிட்ட பிரிவுகளின் அவசரத் தேவையை டீன் எடுத்துரைத்து, நமது உடனடி பங்களிப்புக்களுக்கான வாய்ப்புகளை பேராசிரியர் முன்வைத்தார்.
இலாப நோக்கற்ற வர்த்தக முயற்சிகளுக்கும் பொது-தனியார் இணைந்து பணியாற்றும் முறை பற்றியும் பேராசிரியர் சுரேந்திரகுமாரன் பார்வையாளர்கள் பலர் ஏற்றுக் கொள்ளும் வகையில் உற்சாகப்படுத்தினார்
மேலும்,தொழில்நுட்பத்துறையில் கூட்டாகப் பயணிப்பது மற்றும் அறிவுப் பகிர்வு: பல்கலைக்கழகத்தின் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகளாக எதிர்காலத்தில் உதவலாம் என்பதையும் பேராசிரியர் எடுத்துரைத்தார்.
பேராசிரியரின் உரை மற்றும் கலந்துரையாடல் ஆகியவை நிறைவுற்ற பின்னர் அவருக்கு கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பெற்றது.