நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சுமார் 1 இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 1 இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் விடுமுறை எடுக்க முடியாமல் தவித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் 12 நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.